வனத்துறை அலுவலகத்தை முற்றுைகயிட்ட பொதுமக்கள்


வனத்துறை அலுவலகத்தை முற்றுைகயிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 March 2022 1:34 AM IST (Updated: 21 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே வனத்துறை அலுவலகத்தை ெபாதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே வனத்துறை அலுவலகத்தை ெபாதுமக்கள் முற்றுகையிட்டனர். 
நீதிமன்ற உத்தரவு 
வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை அடிவார கிராமப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கிடை மாடுகளை மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில்  மேய்ச்சலுக்கு அழைத்து செல்வர். 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யுனெஸ்கோ அமைப்பு பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்து உள்ளதாலும், மேலும் இப்பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதாலும் மேய்ச்சலுக்கு கிடை மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்து செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 
மலைமாடுகள் 
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு  அழைத்து சென்றதாக 6 பேரை எஸ்.கொடிக்குளம் வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்தில் வைத்திருந்தனர்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பிடித்து வைத்த 6 பேரையும் விடுவிக்க கோரி வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை 
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனச்சரக அலுவலர் செல்லமணி, கூமாப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனுமதியின்றி வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு சென்றதற்காக 6 பேருக்கும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story