80 கி.மீ. சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
80 கி.மீ. சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்
மணப்பாறை
உடல்நலனை பேணிகாக்கும் வகையில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் தங்களது அலுவலகங்களுக்கு சைக்கிளில் சென்று வருகிறார்கள். அந்தவகையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுர்ஜித்குமார், சமீபத்தில் திருச்சியில் இருந்து மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சைக்கிளிலேயே திருச்சி சென்றார். இந்நிலையில் நேற்றும் போலீஸ் சூப்பிரண்டு திருச்சியில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு மணப்பாறை போலீஸ் நிலையம் வந்தடைந்தார். அங்கு ஆய்வு பணிகளை முடித்த அவர், சிறிது நேரம் போலீசாருடன் கலந்துரையாடிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அந்தவகையில் அவர் மொத்தம் 80 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கே.பெரியபட்டி அருகே சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடித்தார்.
Related Tags :
Next Story