ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு


ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு
x
தினத்தந்தி 21 March 2022 1:47 AM IST (Updated: 21 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 10-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை மாநில செயலாளர் புகழேந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் பாலகுரு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். முடிவில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லியாக்கத் அலி நன்றி கூறினார். மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் பொறியியல் பிரிவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த மேற்பார்வையாளர்களுக்கு இளநிலை  பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Next Story