பாரம்பரிய மீன்பிடி திருவிழா


பாரம்பரிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 21 March 2022 1:48 AM IST (Updated: 21 March 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது.

மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் விவசாய பணிகள் முடிந்து கோடை காலத்தில் கண்மாய்களில் தண்ணீர் வற்றிய பின் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி எவ்விதமான வேறுபாடுகள் இல்லாமல் குடும்பத்தினருடன் சமத்துவமாக மீன்களை பிடித்து செல்லும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா மேலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு மேலூர் அருகே சாளக்கிபட்டியில் உள்ள கருங்குளத்து கண்மாய், சருகுவலையபட்டியில் நைனான் கண்மாய் மற்றும் வண்ணாம்பாறைப்பட்டியில் உள்ள கண்மாய் ஆகிய கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடி திருவிழாக்கள் நடைபெற்றது. 
அதிகாலையில் கிராம பெரியவர்கள் பாரம்பரிய வழக்கப்படி துண்டுகளை ஆட்டி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாய்களில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். 
வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. இங்கு பிடித்த மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவது வழக்கம். இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழாவை நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Next Story