பள்ளி மேலாண்மை குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் தன்னார்வலர்


பள்ளி மேலாண்மை குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் தன்னார்வலர்
x
தினத்தந்தி 21 March 2022 1:55 AM IST (Updated: 21 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே ெபண் தன்னார்வலா் ஒருவர் மணல் சிற்பம் மூலம் பள்ளி மேலாண்ைம குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பேராவூரணி:
பேராவூரணி அருகே ெபண் தன்னார்வலா் ஒருவர் மணல் சிற்பம் மூலம் பள்ளி மேலாண்ைம குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
பெண் தன்னார்வலர் 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே காலகம் பகுதியை சேர்ந்தவர் ரதி(வயது 41). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு நிரந்த பணி ஏதும் இல்லாததால், தற்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில்  தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். 
நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு  பள்ளிகளிலும் நடைபெற்றது. பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற கூட்டத்தில்  பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவரும் விதமாக நம் பள்ளி, நம் பெருமை என்ற தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழுவிற்கான லோகோவை மணல் சிற்பமாக ரதி வடிவமைத்துள்ளார்.
மணல் சிற்பம் 
இதுகுறித்து ரதி கூறுகையில்,
"எனக்கு மணல் சிற்பம் குறித்த முன் அனுபவமோ பயிற்சியோ இல்லாத நிலையில், தானாக முயற்சி செய்து மணல் சிற்பம் அமைக்க கற்றுக்கொண்டேன். இதற்கு முன் திருவள்ளுவர், பகத்சிங் உள்ளிட்டோரின் மணல் சிற்பங்களை அமைத்துள்ளேன். பள்ளி மேலாண்மை குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளேன்" என்றார்.
தன்னார்வலர் உருவாக்கி உள்ள மணல் சிற்பத்தை கிராமத்தினர், மாணவர்கள் வந்து பார்த்து ரசித்தனர். 

Next Story