வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்


வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 21 March 2022 1:58 AM IST (Updated: 21 March 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ராஜபாளையம்,
 ராஜபாளையம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளன. இதில் 10 பேர் நகராட்சிக்கு தாங்கள் கொடுக்க வேண்டிய வாடகை தொகை ரூ.25 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில், நகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் தென்காசி சாலையில் உள்ள கடை மற்றும் சில வீடுகளுக்கு  குடிநீர் வரி கட்டவில்லை என்பதால் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர்.

Related Tags :
Next Story