‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 March 2022 2:33 AM IST (Updated: 21 March 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பகலில் எரியும் தெருவிளக்கு

 மதுரை சத்தியமூர்த்தி நகர் 1,2-வது தெரு மற்றும் மெயின் ரோடு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரங்களிலும் தொடர்ந்து  எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் விளக்குகள் பழுதாக வாய்ப்புகள் உள்ளது. தெருவிளக்கை இரவு நேரங்களில் மட்டும் எரிய செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபுபக்கர், மதுரை.

கடைகள் திறக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கடைகள் ஓராண்டு காலத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆதலால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் கடையை  திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமுதா, திருப்பத்தூர்.

சேதமடைந்த சாலை 

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்த வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே  போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் சாலையை  சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
சண்முகவேல், விருதுநகர்.

தெருவிளக்குகள் எரியுமா?

ராமேசுவரம் கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருபுறம் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரியாஸ், ராமேசுவரம்.

குறுகலான சாலை 
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர், கண்டவிராயன்பட்டி, காவனூர் வழியாக பொன்னமராவதி செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சாலைகள் குறுகலாக அமைந்துள்ளது. சிலர் கனரக வாகனங்களை சாலையில் இயக்குவதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுகின்றது. குறுகலான சாலையில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.
முத்துகிருஷ்ணன், திருப்பத்தூர்.

நாய்கள் தொல்லை
 மதுரை தத்தனேரி பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுபாஷ், மதுரை.

இருசக்கர வாகனங்களால் அவதி

ராமேசுவரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சிலர் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி செல்கின்றனர். பஸ்சை நிறுத்துவதற்கு போதிய  இடமின்றி ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் ஓட்டுனர்களும், பயணிகளும் அவதிப்படும் நிலை உள்ளது. இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ரவி, ராமேசுவரம்.

அடிப்படை வசதி தேவை

விருதுநகர் மாவட்டம்  குந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் இதன் அருகே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது தவிர ஊரில் சேதம் அடைந்த தொடக்கப்பள்ளி கட்டிடமும் பொருட்கள் வைப்பறையாக செயல்படுகிறது. மகளிர் குழு கட்டிடமும் பழுதடைந்து காணப்படுகின்றது.. கழிவு நீர் ஓடைப் பாலமும் பழுதடைந்துள்ளது. எனவே இப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கோவிந்தன், விருதுநகர்.

Next Story