புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்து நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்து நாசம்
x
தினத்தந்தி 21 March 2022 2:34 AM IST (Updated: 21 March 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்று வீசியது. இதில் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்று வீசியது. இதில் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது. 
கடும் வெயில்
புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. 
இதனால் மழை பெய்யாதோ என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏங்கி தவித்தனர். 
சூறாவளிக்காற்று
இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியான பனையம்பள்ளி, காவிலிபாளையம், புங்கம்பள்ளி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. ½ மணி நேரம் பெய்த மழையால் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இந்த சூறாவளிக்காற்றின் காரணமாக பனையம்பள்ளி துண்டன் தோட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பயிரிட்டு இருந்த 700 வாழை மரங்கள் முறிந்து நாசம் ஆனது. 

Next Story