ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 809 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7,001 பேர் 2-வது தவணை தடுப்பூசியும், 129 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டார்கள். எனவே ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 939 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story