வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தடிக்காரன்கோணத்தில் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அழகியபாண்டியபுரம்:
பொதுமக்களின் வாழ்வுரிமையை வனத்துறையினர் பறிப்பதாகவும், இதை கண்டித்தும் தடிக்காரன்கோணத்தில் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழ்வுரிமை இயக்கம் தலைவர் ஜெயராம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மேரி ஜாய், செயலாளர் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வடக்கு பொன் சுந்தர்நாத், நாம் தமிழர் கட்சி குமரி மாவட்ட பொருளாளர் அனிடர் ஆல்வின், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜினோ, பா.ஜனதா மேற்கு மாவட்ட தலைவர் மகாதேவன், தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வார்டு உறுப்பினர் அஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் கீரிப்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
---
Related Tags :
Next Story