பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறு இல்லை; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி


பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறு இல்லை; மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி
x
தினத்தந்தி 21 March 2022 3:20 AM IST (Updated: 21 March 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறு இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறு இல்லை. சில விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். தார்மிக கல்வி, மதங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதை மதவாத பிரச்சினையாக பார்க்காமல் அனைவரும் வரவேற்க வேண்டும். அதை நான் வரவேற்கிறேன். சித்தராமையா வரவேற்றுள்ளார். அதையும் நான் வரவேற்கிறேன். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை எடுத்த இயக்குனர் பா.ஜனதாவை சேர்ந்தவர் அல்ல. வரலாற்று அடிப்படையில் யார் நல்ல படம் எடுத்தாலும் அதை நான் வரவேற்கிறேன்.
  இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.

Next Story