வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அர்ச்சனை


வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அர்ச்சனை
x
தினத்தந்தி 21 March 2022 3:23 AM IST (Updated: 21 March 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மலையடிவாரத்தில் பிராமணாள் அன்னதான அறக்கட்டளை சார்பில் கணபதி பூஜை, முருகப்பெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, வெங்கடாஜலபதிக்கு 108 அர்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியவை நடந்தன. இதில் பக்தர்கள் திருப்புகழ், சிவபுராணம், அபிராமி அந்தாதி ஆகியவற்றை பாராயணம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

Next Story