கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 21 March 2022 3:23 AM IST (Updated: 21 March 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2-ம் சுற்றாக 1 லட்சத்து 20 ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், 27 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற மே மாதம் 1-ந்தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து குக்கிராமங்கள், கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story