அவதூறாக பேசிய அ.தி.மு.க. பிரமுகரின் மகன் மீது வழக்கு
அவதூறாக பேசிய அ.தி.மு.க. பிரமுகரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம் (வயது 38), பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் அவதூறாக பேசி சமூக வலைத்தளமான டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெரம்பலூர் அருகே சத்திரமனை காமராஜர் தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் அப்துல் வாஹிப் (28) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் அப்துல் வாஹிப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்துல் வாஹிப்பின் தந்தை முகமது பாரூக் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு செயலாளராகவும், கட்சியின் மேடை பேச்சாளராகவும் உள்ளார். என்ஜினீயரிங் படித்துள்ள அப்துல் வாஹிப் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் அல்பைகில் என்ற இடத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி நாடு திரும்பிய அப்துல் வாஹிப்புக்கு 13-ந்தேதி ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர் தனது மனைவியுடன் கடந்த 18-ந்தேதி மீண்டும் துபாய் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story