அஞ்சுகிராமம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு
அஞ்சுகிராமம் அருகே செல்போன் கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு போனது.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே செல்போன் கோபுரத்தில்
பேட்டரிகள் திருட்டு போனது.
அஞ்சுகிராமம் அருகே பொற்றையடியில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் உள்ளது. இங்கு நெல்லை, மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் கோபுரத்தின் கதவை யாராவது திறந்தால் ராஜ் செல்போனில் அலாரம் அடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மர்ம நபர்கள் நேற்று அதிகாலையில் செல்போன் கோபுரத்தில் உள்ள அறைக்கதவை உடைத்துள்ளனர். அப்போது ராஜ் செல்போனில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே ராஜ் இதுகுறித்து செல்போன் கோபுரம் அருகில் வசிக்கும் மற்ற பணியாளர்களுக்கு தகவல் கொடுத்து அங்கே சென்று பார்க்குமாறு கூறினார். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பூட்டியிருந்த அறைக்கதவை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 24 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----
Related Tags :
Next Story