மிளகாய் விளைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்


மிளகாய் விளைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 21 March 2022 5:07 PM IST (Updated: 21 March 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் மிளகாய் விளைச்சலை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் மிளகாய் விளைச்சலை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மிளகாய் சீசன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அருகே ஆர். காவனூர், செவ்வூர் தேர்த்தங்கல், பாண்டியூர் கொளத்தூர், திருஉத்திரகோசமங்கை ஆனைகுடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும்இந்த ஆண்டு மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் நயினார் கோவில் செல்லும் சாலையில் உள்ள ஆர். காவனூர் தேர்த்தங்கல் உள்ளிட்ட பல ஊர்களிலும் இந்த ஆண்டு பூச்சி தாக்குதலாலும் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தேர்த்தங்கல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி நாகஜோதி கூறியதாவது:- கடந்த ஆண்டு அதிக அளவு பெய்த மழையால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மிளகாய் சீசன் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.ஆனால் கோடை மழை ஓரளவு பெய்தால்தான் மிளகாய் செடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும். 
விளைச்சல் குறைவு
ஆனால் இந்த ஆண்டு இதுவரையிலும் கோடை மழை பெய்யாததால் ஒருவிதமான பூச்சி தாக்குதலாலும் மிளகாய் செடிகள் நன்றாக வளர்ச்சி இல்லாததுடன் மிளகாய் விளைச்சல் குறைவாகவே உள்ளது.மிளகாய் விளைச்சலுக்காக செலவு செய்த பணமாவது கிடைக்குமா என்பது கூட தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story