முத்தாலம்மன் கோவில் பால்குட திருவிழா
பரமக்குடியில் முத்தாலம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்தது. அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடத் திருவிழா நடந்தது.அதையொட்டி பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம், செட்டியார் சங்கம், ஆயிர வைசிய மறுமலர்ச்சி பேரவை, விஸ்வகர்மா சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவிலை அடைந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்பு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடு களை ஆயிர வைசிய சபை மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story