பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு குடு, குடுப்பை அடித்தவாறு வந்து மனு


பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு குடு, குடுப்பை அடித்தவாறு வந்து மனு
x
தினத்தந்தி 21 March 2022 5:59 PM IST (Updated: 21 March 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு குடு, குடுப்பை கலெக்டர் அலுவலகத்துக்கு குடுகுடுப்பை அடித்தவாறு வந்து மனு அளித்தனர்.

திருவண்ணாமலை
-
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு குடு, குடுப்பைக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு குடுகுடுப்பை அடித்தவாறு வந்து மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். 
இதில் கல்வி உதவித் தொகை, வாங்கிக்கடனுதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதி சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களை அவர் பெற்று கொண்டார். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

நாமம் போட்டு வந்த நபர்

திருவண்ணாமலை சொரகுளத்தூர் பகுதியை சேர்ந்த முத்தையன் என்பவர் நெற்றி, வயிறு, முதுகில் நாமம் போட்டு கொண்டு வந்து குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த மாதம் 25-ந் தேதி சொரகுளத்தூர் ஏரி கரையில் உள்ள காளியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்ற போது ஒருவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி அடித்தார். இது குறித்து கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனநவே எனது புகார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளேன் என்றார்.

சாதி சான்றிதழ்

ஆரணியை சேர்ந்த குடு, குடுப்பைக்காரர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கமிட்டி உறுப்பினர் சேகர் தலைமையில் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆரணி டவுன் பள்ளிக்கூட தெருவில் சுமார் 70 குடும்பங்கள் இந்து- கணிக்கர் வகுப்பை சேர்ந்தவர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை தாலுகா முத்துமாரியம்மன் கோவில் தெரு, அய்யம்பாளையம் புதூர் ஒட்டகுடிசல் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் சுமார் 3 தலைமுறைகளாக இந்து - கணிக்கர் பழங்குடியினர் இன சாதி சான்று கேட்டு அரசிடம் மனு கொடுத்து வருகின்றனர். பழங்குடியினர் சான்றிதழ் வழங்காவிட்டால் ஏப்ரல் மாதம் 18-ந் தேதியன்று காந்திய வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி பட்டா, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story