கே.வி.குப்பம் அருகே ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம்
கே.வி.குப்பம் அருகே ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடந்தது.
கே.வி.குப்பம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் கே.வி.குப்பம் வட்டாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் 7 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடைபெற்றது. குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மைதிலி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் லோ.ரவிசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ்குமார் வரவேற்றார். வட்டார திட்ட உதவியாளர்கள் கோபிநாத், மங்கையர்க்கரசி, செல்வி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் 6 வயது வரையிலான குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை அளவீடு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் இந்த வாரம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story