முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் தபால் அனுப்பும் போராட்டம்


முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 6:49 PM IST (Updated: 21 March 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் முதல் அமைச்சருக்கு விவசாயிகள் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்க நாயகலு தலைமையில் தபால் பெட்டியில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை அடங்கிய தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தபாலில் இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள இளையரசனேந்தல், ஜமீன் தேவர்குளம், பிள்ளையார்நத்தம், பிச்சை தலைவன்பட்டி, வடக்குப்பட்டி, வெங்கடாலசலபுரம், அய்யனேரி, அப்பனேரி, சித்திரம்பட்டி, புளியங்குளம், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்கவும், மேற்படி கிராமங்கள் கோவில்பட்டி தாலுகா தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடரவும் கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ரவி, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப் பாளர் கோபால கிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராகுல், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story