ஆண்களுக்கும் இலவச பஸ் அனுமதி வழங்க இந்து தேசிய கட்சி கோரிக்கை
ஆண்களுக்கும் இலவச பஸ் அனுமதி வழங்க இந்து தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கி வருகிறது. இது வரவேற்கப்படுவதோடு அதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் இலவச அனுமதி வழங்க வேண்டும். மேலும், பெண்களுக்கு மாநிலம் முழுவதும் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் என பாகுபாடின்றி உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டி தமிழகத்தில் ஆண்களும், பெண்களும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்து தேசிய கட்சியினர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி வந்த கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story