காணாமல் போன தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்பு


காணாமல் போன தொழிலாளி  வாய்க்காலில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 21 March 2022 8:49 PM IST (Updated: 21 March 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே காணாமல் போன தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் அம்பேத்கர் நகர் மேலத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் சோனமுத்து (45). கூலி தொழிலாளியான இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சோனமுத்து கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி வள்ளி எல்லா இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரை தொடர்ந்து குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராணி மகாராஜபுரம் மரப்பாலம் வாய்க்கால் தண்ணீரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story