கோடநாடு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனபால் ரமேஷ் கையெழுத்து
கோடநாடு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனபால் ரமேஷ் கையெழுத்து போட்டனர்.
கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கின் திருப்பு முனையாக இந்த கொலை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதுடன் வழக்கு முடியும் வரை ஊட்டியில் தங்கி இருந்து சோலூர்மட்டம் போலீசில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனால் அவர்கள் தினமும் கையெழுத்துபோட்டு வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நிபந்தனை தளர்த்தப்பட்டு வாரத்துக்கு ஒருமுறை கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட்டு உத்தர விட்டது.
இதையடுத்து தனபால், ரமேஷ் ஆகியோர் நேற்று காலை 9.30 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு கையெழுத்துபோட்டுவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story