அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
ஊட்டி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் அளித்த மனுவில், பிரகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 174 வீடுகளில் 95 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கி வழங்கப்பட்டது.
தற்போது குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலவசமாக வழங்கிய வீடுகளுக்கு பணம் மொத்தமாக கட்டும்படி கூறுவதால், நிலமே வாங்க முடியாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்த எங்களால் கட்ட இயலாத சூழ்நிலை உள்ளது.
சிலர் அரசு வழங்கும் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்கின்றனர். கூலி வேலை, தோட்ட வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். எனவே, எங்களது நிலையை அறிந்து உதவ வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அடிப்படை வசதிகள்
மஞ்சூர் அருகே அணிக்காடு கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அணிக்காடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், நடைபாதை, வடிகால், சமுதாயக்கூடம், அங்கன்வாடி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட இல்லை. வனப்பகுதியில் உள்ள ஊற்றில் இருந்து குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.
இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த காலத்திலும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story