இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் வன கோட்ட அதிகாரி பேச்சு
இயற்கை வளங்களின் அவசியத்தை புரிந்து பாதுகாக்க வேண்டும் என்று நீலகிரி வன கோட்ட அதிகாரி பேசினார்.
ஊட்டி
இயற்கை வளங்களின் அவசியத்தை புரிந்து பாதுகாக்க வேண்டும் என்று நீலகிரி வன கோட்ட அதிகாரி பேசினார்.
உலக வன நாள்
ஆண்டுதோறும் மார்ச் 21-ந் தேதி உலக வன நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி வன கோட்டம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி சூழல் சங்கம் சார்பில், உலக வன நாள் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னதாக உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் நீலகிரி வன கோட்ட அதிகாரி சச்சின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை வளங்கள்
தமிழகத்தில் 33 சதவீதம் காடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. ஆண்டுக்கு ஒரு சதவீதம் வனப்பகுதியை அதிகரிக்க முயற்சி செய்தால், சில ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும்.
இதற்காக அரசு நிலங்கள், பள்ளி கள், கல்லூரிகள் என எங்கு இடம் உள்ளதோ அங்கு சோலை மரக்கன்று களை நடவு செய்து பராமரிக்க வேண்டும். அப்போதுதான் உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு போன்றவற்றை குறைக்க முடியும்.
வனப்பகுதிகளில் நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பின்போது மருத்துவமனைகளில் பலர் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் உயிரிழந்தனர்.
உணவு இல்லாமல் வாழ முடியும். ஆனால், ஆக்சிஜன் இல்லாமல் வாழ முடியாது. இதனால் நீர், காற்று இயற்கை வளங்களின் அவசியத்தை புரிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும். மரங்களின் மதிப்பை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரிக்க முயற்சி
இதை தொடர்ந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நீலகிரி வன கோட்ட அலுவலர் மரக்கன்றுகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோத்தகிரி, கூடலூர், பைக்காரா வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகளை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனப்பகுதியை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
நீலகிரியில் காய்ந்த புற்களால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டால் பொதுமக்கள் உதவி செய்வதோடு, தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் ஊட்டி தெற்கு வனச்சரகர் நவீன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story