கோத்தகிரியில் 4 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி


கோத்தகிரியில் 4 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி
x
தினத்தந்தி 21 March 2022 9:00 PM IST (Updated: 21 March 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் 4 இடங்களில் ரூ.2½ கோடியில் சாலையோர தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கோத்தகிரி

கோத்தகிரியில் 4 இடங்களில் ரூ.2½ கோடியில் சாலையோர தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தடுப்புச்சுவர் கட்டும் பணி

மலைமாவட்டமான நீலகிரியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கோடை சீசனையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்ைக அதிகம். எனவே அதை கருத்தில் கொண்டு சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்துக்கு செல்லும் சாலையில் ரூ.1 கோடியே 70 லட்சத்தில் கொண்டை ஊசி வளைவை விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் கட்டும் பணி, மேலும் அதே சாலையில் மண் சரிவு ஏற்படுவதை தடுக்க கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

போக்குவரத்து நெரிசல் குறையும்

அதுபோன்று ரூ.95 லட்சத்தில் கோத்தகிரி மிளிதேன் கிராமத்தில் இருந்து எரிசிபெட்டா கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள 2 குறுகிய வளைவுகளை அகலப்படுத்தி 150 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு சுவர் கட்டும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இது குறித்து கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:- 

சாலையோரங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் விரைவில் முடிந்துவிடும். இது மட்டுமின்றி நகரின் முக்கிய சாலைகளின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, மழைநீர் கால்வாய்கள் புதுப்பிக்கும் பணி, கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

முக்கிய சாலைகளில் உள்ள குறுகிய வளைவுகள் மற்றும் சாலைகள் அகலப்படுத்தப் பட்டு உள்ளதால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், சீசன் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story