ஊட்டியில் மதுவிலக்கு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு


ஊட்டியில் மதுவிலக்கு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 March 2022 9:00 PM IST (Updated: 21 March 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மதுவிலக்கு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நடந்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுவிலக்கு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கலெக்டர் எஸ்.பி.அம்ரித் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் கலைக்குழுவினர் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, மதுவிலக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

 கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக 4 கலைக்குழுவினர் எருமாடு, அய்யன்கொல்லி, எடப்பள்ளி, எல்லநள்ளி போன்ற கிராமங்களுக்கு செல்ல உள்ளனர் என்றார். 

இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலர் (பொறுப்பு) சேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், கோட்ட ஆய அலுவலர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story