சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜிக்கப்படுகிறது
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜிக்கப்படுகிறது
காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜிக்கப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவு பெட்டி
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூ போட்டு கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
தாக்கத்தை ஏற்படுத்தும்
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்தப் பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
உதாரணமாக முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.
இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு
இந்த நிலையில் திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி (வயது 40) என்ற பக்தரின் கனவில் உத்தரவான இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story