தடுப்பூசி போடாதவர்களுக்கு மின்சார ரெயிலில் செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பது நியாயமா?-மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
தடுப்பூசி போடாதவர்களுக்கு தற்போதும் மின்சார ரெயிலில் செல்ல கட்டுப்பாடுகள் விதித்து இருப்பது நியாயமா? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
தடுப்பூசி போடாதவர்களுக்கு தற்போதும் மின்சார ரெயிலில் செல்ல கட்டுப்பாடுகள் விதித்து இருப்பது நியாயமா? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
பொதுநலன் மனு
மும்பையில் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் மின்சார ரெயில் உள்பட பொது வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி எம்.எஸ். கார்னிக் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில அரசு தரப்பில், வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு தான் தடுப்பூசி போடாதவர்களை மின்சார ரெயிலில் அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது.
மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் தடுப்பூசி போடாதவர்களுக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக மாநில அரசு கூறியது.
கட்டுப்பாடுகள் நியாயமா?
இதையடுத்து நீதிபதிகள், 2020, 2021 போல தற்போது கொரோனா பரவல் அதிகமாக இல்லை என்றனர். மேலும் அவர்கள், "நீங்கள் (மாநில அரசு) இந்த கட்டுப்பாடுகளை முதல் முதலாக விதித்த போது இருந்த சூழல் குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தற்போது நியாயமானது தானா?" என்றனர்.
மேலும் அவர்கள் தற்போது உள்ள சூழலில் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பது தேவைதானா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
Related Tags :
Next Story