மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் மகசூலை அதிகரிக்கலாம்


மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் மகசூலை அதிகரிக்கலாம்
x
தினத்தந்தி 21 March 2022 10:16 PM IST (Updated: 21 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு, வேளாண் மாணவிகள் விளக்கம் அளித்தனர்.






சுல்தான்பேட்டை


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற தங்கல் திட்டத்தின்கீழ் சுல்தான்பேட்டையில் தங்கி, அதைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பயிற்சி எடுத்தும், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர். அதன்படி ஜல்லிப்பட்டி கிராமத்தில் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைத்த பூச்சி மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர்களுடன் சேர்ந்து செயல் விளக்கம் அளித்தனர். அப்போது மாணவிகள் விவசாயிகளிடம் கூறியதாவது:- மக்காச்சோளத்தில் மகசூலை பெரிதும் பாதிக்க கூடிய ஒன்று படைப்புழு தாக்குதல் ஆகும். விதை விதைத்து ஒரு வாரதிற்குள்ளாகவே செடியை தாக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த புழு செடியின் நடு பகுதியில் உள்ள தழைகளை உண்டு, செடி வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலமாக கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.


 வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுதல், இன கவர்ச்சி பொறிகள் வைத்தல், விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துதல், இயற்கையான ஒட்டுண்ணிகளை பயன்படுத்துதல் போன்றவவைகள் மூலம் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம் என விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Next Story