நெகமம் அருகே வாழை மரத்தில் 5 அடி நீளத்திற்கு வாழைத்தார்


நெகமம் அருகே வாழை மரத்தில் 5 அடி நீளத்திற்கு வாழைத்தார்
x
தினத்தந்தி 21 March 2022 10:16 PM IST (Updated: 21 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே வாழை மரத்தில் 5 அடி நீளத்திற்கு வாழைத்தார் உள்ளது. அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

நெகமம்

நெகமம் அருகே வாழை மரத்தில் 5 அடி நீளத்திற்கு வாழைத்தார் உள்ளது. அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

வாழை சாகுபடி

கோவை மாவட்டம் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக நிலக்கடலை, வாழை சாகுபடி உள்ளது. இந்த சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கோடை காலத்திலும் சொட்டுநீர் மற்றும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை, வாழை மற்றும் பல்ேவறு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். தற்போது வாழை மரங்களில் குலைதள்ளி வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டு உள்ளன. மேலும் விரைவில் வாழைத்தார் சாகுபடி செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

5 அடி நீளத்தில் வாழைத்தார் 

இந்தநிலையில் நெகமம் அருகே உள்ள ஜக்கார்பாளையத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு இடையே வாழை மரங்களை சாகுபடி செய்து உள்ளார். இதில் கதளி, பூவன், ஆயிரங்கால் வாழை கன்று என 10-க்கும் மேற்பட்ட வாைழகளை விவசாய நிலத்தில் சாகுபடி செய்து உள்ளார். 

இதில் ஒரு வாழை மரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளைதள்ளியது. இதில் வாழைக்காய் சீப்கள் அதிகளவில் இருந்தன. குறிப்பாக 11 அடுக்குளில் வாழைக்காய் சீப் இருந்தது. இதனால் அந்த விவசாயி ஆச்சரியம் அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாழைகளை சாகுபடி செய்தேன். இதில் ஒரு வாழையில் மட்டும் குளை தள்ளியதில் சுமார் 5 அடிநீளத்திற்கு வாழைத்தார் உள்ளது. என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இதுபற்றிய தகவல் பரவியதும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று, 5 அடி நீளமுள்ள அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
1 More update

Next Story