வாணியம்பாடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி


வாணியம்பாடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
x
தினத்தந்தி 21 March 2022 10:34 PM IST (Updated: 21 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே அடிப்படை வசதிகளின்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அடிப்படை வசதிகளின்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் வட்ட பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் பொன்னிவட்டம், அண்ணா நகர், கொல்லக் கொட்டாய், அருந்ததியர் காலனி பகுதியில் இருந்து சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை உள்ளிட்ட அனைத்துமே பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இது குறித்து மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். 

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் குடிநீர் தேவை எனில் பள்ளியை விட்டு அரை கிலோ மீட்டர் தூரம் சென்று மாணவிகளே தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேபோல் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகாமையில் உள்ள நிலங்களுக்கு சென்று வரும் நிலைதான் உள்ளது என மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவ- மாணவிகளின் நலனை காத்திட, பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story