கிருஷ்ணகிரி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கூளியம் ஊராட்சி அம்மனேரி, ஒம்பலக்கட்டு, சவுளூர் கிராமத்திற்கு உட்பட்ட மகாபாரத திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி காலை கணபதி ஹோமம், லிங்க பூஜை மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் அன்னதானம் ஆகியவை நடந்தது. 4-ந் தேதி முதல் மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தன. இதில் கிருஷ்ணன் பிறப்பு, திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டு மகாராஜன் இறப்பு, சுபதிரை திருக்கல்யாணம், அர்சுணன் தபசு நாடகம் நடந்தது. 14-ந் தேதி மதியம் அர்ச்சுணன் மாடு திருப்புதலை முன்னிட்டு எருது விடும் விழாவும் நடைபெற்றது. மேலும் சித்திர சேனன் சண்டை, கிருஷ்ணன் தூது, அபிமன்னன் சண்டை நாடகம், கர்ணன் மோட்சம் ஆகிய நாடகங்கள் நடந்தன. விழாவின் இறுதி நாளன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருநங்கைகள் துடைப்பத்தால் அடித்து ஆசி வழங்கினர். இந்த நிகழ்ச்சியை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மனேரி, ஒம்பலக்கட்டு, சவுளூர், கூளியம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story