கந்திகுப்பம் அருகே லாரி மீது மினி பஸ் மோதி டிரைவர் பலி 9 பேர் காயம்
கந்திகுப்பம் அருகே லாரி மீது மினி பஸ் மோதி டிரைவர் பலியானார். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
பர்கூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவர், குடும்பத்தினர், உறவினர்கள் 16 பேருடன் நேற்று முன்தினம் மாலை, தனியார் மினிபஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டார். பஸ்சை ஜான் ேபாஸ்கோ (45) என்பவர் ஓட்டி வந்தார். கந்திக்குப்பம் அருகே சுண்டம்பட்டி சர்ச் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மினிபஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் இருந்த சண்முகம், மோகனவள்ளி (36), கண்ணகி(36), சந்தியா (34) மற்றும் சிறுவர்கள் நல்லி பிரேம்(13), சாம்ராஜ் (9), சுபாஸ்ரீ (8), கீர்த்திகா (11) நேர்லன் ஹேமேஷ் (6) ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story