கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா அகரம் அருகே உள்ள அவதானப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3½ ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story