விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு தர்மபுரி கோர்ட்டு உத்தரவு
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைத்து தர்மபுரி கோர்ட்டு உத்தரவிட்டது.
தர்மபுரி:
தர்மபுரியில் கடந்த 2015-ம் ஆண்டு தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோரை விமர்சித்து விஜயகாந்த் பேசினார். இதுதொடர்பாக விஜயகாந்த் மீது தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. விஜயகாந்த் சார்பில் அவருடைய வக்கீல் காவேரிவர்மன் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story