அரசு பஸ்கண்ணாடியை உடைத்த 3 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை


அரசு பஸ்கண்ணாடியை உடைத்த 3 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 March 2022 10:59 PM IST (Updated: 21 March 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கண்ணாடியை உடைத்த 3 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வேலுார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி அரசு பஸ் சென்றது. பஸ்சை திருத்தணியை சேர்ந்த சண்முகம் என்பவர் ஓட்டி சென்றார். பஸ் பாராஞ்சி சுடுகாடு அருகே சென்றபோது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள், பஸ்சை மறித்து டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் கல்லை எடுத்து பஸ் மீது வீசினர். இதில், பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது.

இதுகுறித்து கண்டக்டர் சக்திவேல் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரக்கோணத்தைச் சேர்ந்த சண்முகம் (25), ராகுல் (25), வெங்கடேசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலுார் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி வசந்தலீலா முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசு பொதுசொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக வாலிபர்கள் 3 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Next Story