தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குளத்தை தூர்வார வேண்டும்
பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் குருமாத்தூர் பகுதியில் பாலாளி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, சிலர் குளத்தை ஆக்கிரமித்து அதன் மடையை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளத்தை தூர்வாரி மடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேனியல், குலசேகரம்.
வீணாகும் குடிநீர்
பைங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆவிரான்குழிவிளை பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் நல்லி சேதமடைந்து உள்ளதால் குடிநீர் வீணாக பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய நல்லியை பொருத்தி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-பால்ராஜ், அரசகுளம்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டகசாலியன்விளை பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. அந்த பகுதியில் இருந்து மங்கம்மாள் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள், மண் நிரம்பி காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பத்மசெல்வராஜ், பட்டகசாலியன்விளை.
இடையூறாக தண்ணீர் தொட்டி
ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஒரு தண்ணீர் தொட்டியும், அதன் எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பயனற்ற நிலையிலும், அதனை சுற்றி கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. சந்திப்பு பகுதியில் இரண்டு பஸ்கள் வரும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பயனற்ற நிலையில் காணப்படும் தண்ணீர் தொட்டியையும், அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமரன், மீனாட்சிபுரம்.
மாணவர்கள் அவதி
அழகியமண்டபத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாலை நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பஸ்கள் மட்டுமே வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்வதற்காக காத்திக்கும் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த வழித்தடத்தில் மாலை நேரங்களில் அதிகளவிலான பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிராங்கிளின், வடக்கநாடு.
Related Tags :
Next Story