முஸ்லிம் மாணவிகள் போராட்டம்


முஸ்லிம் மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 11:09 PM IST (Updated: 21 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருவிதாங்கோட்டில் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தக்கலை, 
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தக்கலை அருேக உள்ள திருவிதாங்கோட்டில் மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் கல்லூரிக்கு வந்த மாணவிகள் திடீரென வகுப்பை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிஜாப் விவகாரம் தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு முழுக்கமிட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், கல்லூரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story