குண்டம் திருவிழா
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22 -ந் தேதி சகுனம் கேட்டலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் 16 -ந் தேதி இரவு கிராமசாந்தி, கொடியேற்றமும், ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல் விழாவும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்காக, நேற்று காலை குண்டம் திறந்து பூ போடுதலும், பக்தர்கள் குண்டத்திற்கு கரும்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் குண்டம் பற்ற வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது. இன்று குண்டம் இறங்க நேற்று மாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
Related Tags :
Next Story