சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேல்மலையனூர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவலூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா தலைமை தாங்கி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். மேலும் சாலை விதிகளை அனைவரும் பின்பற்றி விபத்துகளை குறைக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அவலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கேசவன், ஏட்டு அய்யப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story