திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 11:11 PM IST (Updated: 21 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்ைத பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம்:
கூலி முழுமையாக வழங்க வேண்டும்
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் சட்ட விதிகளுக்கு புறம்பாக வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களை காலை 7 மணிக்கு வர வேண்டுமென நிர்ப்பந்தம் செய்வதையும், காலை 9 மணிக்கு வர வேண்டும் என்று மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சட்ட கூலி ரூ.273-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். 
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
பெரிய ஊராட்சிகளில் இதுவரை 40 முதல் 55 நாட்கள் தான் வேலை பார்த்துள்ளார்கள்.  சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று வேலை பார்ப்பதை தவிர்த்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை செய்யும் பெண்கள் முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார் இதில் விவசாய சங்க நிர்வாகிகள், 100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story