மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
நொய்யல்,
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள வள்ளுவர் நகர் தெற்கு முதல் வீதி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 72). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலத்துறைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரான்சிஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரான்சிஸ் படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பிரான்சிஸ் மனைவி மரிய பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story