வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி பெறாத நிலையிலும் (கொரோனா தொற்றின் காரணமாக) நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் பதவி உயர்வுக்கான தகுதி காலத்தை 4 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு தாமதமின்றி வழங்க வேண்டும், 2021 சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு நிதியாண்டு நிறைவதற்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் மணிகண்டன், துணைத்தலைவர் சுதர்சன், இணை செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஊழியர்கள் நேற்று மாலை 4.45 மணிக்கு பிறகு பணியில் ஈடுபடவில்லை. பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story