மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2022 11:20 PM IST (Updated: 21 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது50) என்பவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.  இதேபோல் கொள்ளிடம் அருகே  மாதிரவேளூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் கொள்ளிடம் கடைவீதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சீர்காழி திருகோலக்கா தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் வாசுதேவன் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கொள்ளிடம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிளையும், சீர்காழி, கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்களையும் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்

Next Story