விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2022 11:29 PM IST (Updated: 21 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

மதுகுடிக்க மனைவி பணம் தராததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வாய்மேடு:
 வாய்மேட்டை அடுத்த தென்னடார் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது65).இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் பேரன் விமல்குமாருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று  மோகன் தனது மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவா் பணம் தரமறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story