சூறைக்காற்றுடன் கனமழை: ஆதனக்கோட்டையில் சோளப்பயிர்கள் சாய்ந்தன இழப்பீடு வழங்க கோரிக்கை
ஆதனக்கோட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சோளப்பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதனக்கோட்டை:
சோளப்பயிர்கள் சாய்ந்தன
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்தது. மேலும், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் தாங்கள் கஷ்டப்பட்டு மூன்று மாதம் வளர்த்துள்ள சோளப்பயிர் சாய்ந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் சூறைக்காற்றால் சோளப்பயிர்கள் சாய்ந்துள்ளது.
கோரிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நேற்று முன்தினம் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சோளப்பயிர்கள் அனைத்தும் சாய்ந்தது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ள நிலையில் அனைத்து சோளப்பயிர்களும் சாயந்தன. எனவே பாதிப்பை பொறுத்து தமிழக அரசு குறைந்த பட்ச இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story