நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா?


நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 21 March 2022 11:33 PM IST (Updated: 21 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் கிளை நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீடாமங்கலம்;
நீடாமங்கலம் கிளை நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
கிளை நூலகம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதி நீடாமங்கலம் ஆகும். 
இங்கு மத்திய- மாநில அரசுகளின் அலுவலகங்கள், வங்கிகள், யில்நிலையம், சிறு வணிக்கடைகள் உள்ளன. இங்கு சுமார் 20ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம் உள்ளது. 
இந்த நூலகம் 1963-ம் ஆண்டு நீடாமங்கலம் சீனிவாசப்பிள்ளை சத்திரத்தில் தொடங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு  நீடாமங்கலம்போலீஸ் நிலையம் அருகில் தனியார் வாடகை கட்டிடத்துக்கு இந்த நூலகம் இடம் மாறியது. 
ஆயிரக்கணக்கான நூல்கள்
பின்னர் 1998-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கட்டிடத்தில் அதாவது தற்போது உள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அருகில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து 
எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் பெருகி வரும் வாசகர்களுக்கு ஏற்ப நூலக பயன்பாட்டுக்கு  போதுமானதாக இல்லை. இங்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் என ஆயிரக்கணக்கான  நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். எனவே வாசகர்களின் நலன் கருதியும் மேலும் பலரது வாசிப்புத்திறனுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் நீடாமங்கலம் நகரில் புதிய நவீன வசதிகளுடன் நூலகக்கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story