5 பேர் மீது வழக்கு


5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 March 2022 11:41 PM IST (Updated: 21 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச் சங்கத்தின் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அனுமதியின்றி விழா நடைபெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் சபரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்திய கார்த்தி, சாமிநாதன், ரகுபதி, பாலகிருஷ்ணன், கணேசன் ஆகிய 5 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story