விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 11:43 PM IST (Updated: 21 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி திருவாரூரில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்;
100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரி திருவாரூரில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரூ.600 ஊதியம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட செலவுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 100 வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாய தொழிலாளர்கள் கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

Next Story